Welcome to AAOSAITRUST
"OM Sai Ram !!! OM Sai Ram !!! OM Sai Ram !!!"
ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலை பற்றியும் , ஆலயம் உருவான வரலாறு பற்றியும் இங்கு சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் இங்கு நடைபெறும் நான்கு வேளை ஆரத்தி பற்றியும் , இந்த வலைதளத்தில் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் .
சீரடி சாயி பாபா, 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர். இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா.