Om Shri Sai Baba
"OM Sai Ram !!! OM Sai Ram !!! OM Sai Ram !!!"சீரடி சாயி பாபா, 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர். இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர்.
பிறப்பு பற்றிய தகவல்
"OM Sai Ram !!! OM Sai Ram !!! OM Sai Ram !!!"சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
Read More